Sunday, 31 July 2022

யாப்பு - செய்யுள் உறுப்பு அசை




அசை 

யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் முதலாவதான எழுத்து என்ற உறுப்பைப் பற்றி சென்ற பதிவில் கண்டோம். எழுத்து உறுப்பு படித்துவிட்டு அசை என்ற அடுத்த உறுப்பை படித்தால் சிறப்பாக இருக்கும். எழுத்து படிக்காதவர்கள் கீழே உள்ள தளத்திற்கு சென்று எழுத்து என்ற யாப்பு உறுப்பை படித்து பயன்பெறவும்.

யாப்பு - எழுத்து உறுப்பு


யாப்பு உறுப்பு அசை :-

        யாப்பு உறுப்பில் அடுத்ததாக உள்ள உறுப்பு அசை. "எழுத்து" என்பதறக்கு "எழுதப்படுதலின் எழுத்து" என்ற மேற்கோள் கொடுத்தது போல, "அசை" என்பதை "எழுத்து அசைத்து இசைகோடலின் அசை" என்று மேற்கோள் கொடுப்பர்.

   அதாவது எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஏற்ப ஒலித்துக் கணக்கிடுவது அசையாகும்.

     இந்த அசையானது எழுத்துக்களால் ஆக்கப்பட்டு சீர்க்கு உறுப்பக வரும். எழுத்துக்கள் ஒன்றோ, பலவோ இணைந்து அசையாகின்றன.

   இதனை புலவர் குழந்தை "யாப்பு என்னும் அணிமணியின் அடிப்படை அசை" என்பார்.

 யாப்பிலக்கணக்காரர்கள்  மொத்தம் இரண்டு அசை உள்ளது என்று வரையறை செய்துள்ளனர்.அவை

  1. நேரசை  2. நிரையசை  இவற்றுள்,

நேரசை என்பது 

   1.     குறில் தனித்து வந்தாலோ  - க

   2. நெடில் தனித்து வந்தாலோ  -  கா

   3. குறிலடுத்து ஒற்று வந்தாலோ  -  கல்

  4. நெடில் அடுத்து ஒற்று வந்தாலோ  - கால்

நேரசை என கணக்கிடப்படும்.


நிரையசை என்பது :-


1. இரு குறில் தனித்து வந்தாலோ -  பல

2. குறில் நெடில் தனித்து வந்தாலோ  -  பலா

3.இருகுறில் அடுத்து ஒற்று வந்தாலோ  - பலர்

4.குறில் நெடில் அடுத்து ஒற்று வந்தாலோ  - பலார்

நிரையசை என கணக்கிடப்படும்.


இதனை யாப்பருங்கலம்

குறிலே நெடிலே குறலிணை ஏனைக் குறில்நெடிலே

நெறியே வரினும் நிறைந்தொற்று அடுப்பினும் நேர்நிரை என்று

அறிவேய்புரையும் மென்தோளி! உதாரணம் ஆ, ழி, வெள், வேல்

வெறியே சுறா, நிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே

என்ற காரிகை எடுத்துரைக்கிறது.

 

நேரசை

 

நிரையசை

 

குறில் தனித்து வருதல்

இருகுறில் இனைந்து வருதல்

பல

நெடில் தனித்து வருதல்

கா

குறில் நெடில் தனித்து வருதல்

பலா

குறிலடுத்து ஒற்று வருதல்

கல்

இருகுறில் அடுத்து ஒற்று வருதல்

பலர்

நெடிலடுத்து ஒற்று வருதல்

கால்

குறில்நெடில் அடுத்து ஒற்று வருதல்

பலார்


இவையே அசைக்கான விளக்கங்கள் ஆகும் . 


உங்களுக்காக :-

        அ. அசார்தீன் (எம்.ஏ., எம்.பில் )

        தமிழ்த்துறை உயராய்வு மையம்,

        பழனி - 624601

என்னுடைய பிற பதிவுகளை காண கீழே உள்ள தளங்களுக்கு  செல்லவும் 

யாப்பு - எழுத்து                 ஆறாம் வகுப்பு - இன எழுத்து   

                           வல்லினம் மிகும் இடம் 


என்னுடைய வலையொலி (Youtube) தளத்தில் என்னை பின் தொடர  உடனே கீழே உள்ள Youtube தளத்திற்குசென்று  subscribe செய்யவும்.

Youtube Iink

No comments:

Post a Comment

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...