அனைவருக்கும் எனது முகமனை தெரிவித்துக்கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
கல்வியை குறித்து அறிஞர்கள் கூறும்போது
"கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று ஒளவையாரும்,
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை" என்று வள்ளுவனும்,
"கல்வி அழகே அழகு" என்று நாலடியும் கல்வியின் அழகை எடுத்துரைகின்றனர்.
அதே போன்று நானும் கல்வியை பற்றியும் தமிழ் இலக்கண, இலக்கியங்களை பற்றியும் உங்களிடத்தில் நான் கற்றவற்றை பதிவு செய்கிறேன். நான் உங்கள் அ. அசார்தீன்.
தொன்மை, தனித்தன்மை, சொல்வளம், சொற்பூங்கொத்து, இலக்கியவளம், இலக்கண சிறப்பு, கலை, அறிவியல், பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம், பழக்க வழக்கம், அவையோடு சேர்த்து பன்னாட்டு ஆய்வு மொழியாக இருப்பது நம் தாய் மொழியான தமிழ்மொழி.
இச்சீர்மிகு தமிழின் பெருமையை எடுத்துரைப்பது என்பது அனைவரின் மீது கடமையாகும். அதன்பொருட்டே இத்தளம் உருவாக்கப்பட்டது. இத்தளத்தில்,
- தமிழ் இலக்கணம் குறித்த பல்வேறு சிறப்புகளையும், இலக்கணங்களில் உள்ள ஐயங்களை படங்கள் மூலமும், கோப்புகள் (Files) மூலமும் சிறப்பான விளக்கமும்.
- தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு தகவல்களும்,
- சமய கருத்துகளும், வரலாறும்
- தமிழ் சான்றோர்களின் அரும் பணியும், கவிதை, உரைநடை, கட்டுரை
தமிழை பற்றியும், இலக்கணம் பற்றியும், இலக்கியம் பற்றியும் ஏதும் ஐயம் இருப்பின் இதில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களிடம் உள்ள பரிந்துரை, இலக்கிய,இலக்கணம் குறித்த கருத்துகள் ஏதும் இருப்பின் பின்வரும் மின்னஞ்சலில் அனுப்பவும்
asardeen311@gmail.com
No comments:
Post a Comment