Saturday, 30 July 2022

யாப்பு - எழுத்து உறுப்பு



 யாப்பிலக்கணம் எழுத்து 


யாப்பிலக்கணம் குறிப்பு :-

       யாத்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல்லே யாப்பு எனப்படுகிறது.

 யாத்தல் என்பதற்கு "கட்டுதல்" என்று பொருள்.

 எழுத்து முதல் தொடை ஈறாக கொண்ட உறுப்புகளை ஒன்றாக கட்டி பாடல் ஒன்றை உருவாக்குவது யாப்பு. 

  இந்த யாப்பிலக்கணமானது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்ற பெயரில் அமைந்து  ஒரு இயலாக உள்ளது.

 இந்த "செய்யுளியலை" முன்வைத்தே பிற்கால இலக்கணிகள் படைத்ததே இந்த யாப்பிலக்கணம்.

 தொல்காப்பியரை தொடர்ந்து யாப்பிலக்கணத்தை எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டதே "யாப்பருங்கலக் காரிகை" இதன் ஆசிரியர் "அமிர்த சாகரர்".

  அமிர்தசாகரரின் இந்த யாப்பருங்கலத்திற்கு குணசாகரர் உரை எழுதியுள்ளார்.

    "யாப்பருங்கலக் காரிகை" முழுவதும் "கட்டளை கலித்துறையால்" எழுதப்பட்டவை.

     "யாப்பருங்கலக் காரிகை" முழுவதும் "மகடூஉ முன்னிலை" வைத்து எழுதப்பட்ட நூலாக இருக்கின்றது.

  " மகடூஉ" என்பதற்கு பெண் என்பது பொருள்.

  யாப்பிலக்கண செய்யுளின் முடிவில் "ஒரு பெண்ணை மையமிட்ட ஒரு தகவல் இடம்பெற்றிருப்பதாக அமைத்துள்ளார் இலக்கணி.

  யாப்பருங்கலக்காரிகை மொத்தம் 44 காரிகைகளை (நூற்பாக்களை) கொண்டது.

 யாப்பில் உள்ள காரிகைகளின் மொத்த எழுத்துக்கள் 2908.

   யாப்பருங்கலக்காரிகை மொத்தம்" மூன்று" இயலோடு  44 காரிகைகளை கொண்டுள்ளது.

    1. உறுபியல் - 20 காரிகைகள்

    2. செய்யுளியல் - 15 காரிகைகள்

     3. ஒழிபியல் - 9 காரிகைகள்

மொத்தம் - 44 காரிகைகள்


இந்த யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இவற்றுள் முதலாவதாக உள்ள எழுத்து என்ற உறுப்பை பற்றி கீழே காணலாம். 

எழுத்து :-  

          " எழுதப்படுதலின் எழுத்து" 

நாம் எழுதுவதெல்லாம் எழுத்து. ஆனால் யாப்பிலக்கணத்தில் எழுத்து என்பது அசைக்கு உறுப்பாக வருபவையே. அசைக்கு உறுப்பாக வரக்கூடிய எழுத்துக்கள் மொத்தம் 12. அவை

1. உயிர்க்குறில் 2. உயிர்நெடில் 3. குற்றியலுகரம் 4. குற்றியலிகரம் 5. ஐகாரக்குறுக்கம் 6. ஆய்தம் 7. வல்லினம் 8. மெல்லினம் 9. இடையினம் 10. உயிரெழுத்து (216)) 11. உயிரளபெடை 12. ஒற்றளபெடை 

 ஆகிய பன்னிரண்டும் அசைக்க உறுப்பாக வரக்கூடிய எழுத்துக்கள். இதனை யாப்பிலக்கண முதல்  காரிகை மூலம் காணலாம்.


" குறில் நெடில் ஆவிகுறுகிய மூஉயிர் ஆய்தம் மெய்யே

 மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்

 சிறுநுதல் பேரமர்க்கண் செய்யவாய் ஐயநுண் இடையாய்!

 அறிஞர் உரைத்த அளபும் அசைக்கு உறுப்(பு)ஆவணவே"

என்ற முதல் காரிகை விளக்குகிறது.

        நன்றி



மேற்காணும் இலக்கணத்தை Pdf வடிவில் காண

யாப்பு - எழுத்து


இவண் :-

    அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்)

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

 பழனி - 624601


இத்தளத்தில் உள்ள பிற இலக்கணங்களுக்கு

 பிற இலக்கணங்களை காண


No comments:

Post a Comment

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...