Friday, 29 July 2022

வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள்.


வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது, நிலைமொழியின் ஈட்ரெழுத்தில் ஒரு வல்லின மெய் இணைவதே வல்லினம் மிகுதல் எனப்படும்.


வல்லின எழுத்துக்களில் மிகும் எழுத்துக்கள் :-


               “க்,ச்,ட்,த,ப்,ற்” என்னும் ஆறு எழுத்துக்கள் தமிழில் வல்லினம் எழுத்துகளாக உள்ளன. இந்த வல்லின எழுத்துகளில் “க்,ச்,த்,ப்” ஆகிய நான்கு எழுத்துக்கள் மட்டுமே வல்லினம் மிகும் எழுத்துகளாக இருக்கின்றன. 

         இதனை நன்னூல் எனும் இலக்கண நூல்.


    “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

    கசதப மிகும் விதவாதன மன்னே”

                                           என்று கூறுகிறது.


 “ட்,ற்” ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழி முதலில் வராது அதனால் இரண்டும் வல்லினம் மிகும் இடங்களிலும் வராது.


(1)வல்லின மிகும் இடங்களுக்கு குறிப்பாக வருமொழியின் முதல் எழுத்து “க,ச,த,ப” வர்க்கமாக இருக்க வேண்டும்.


க,ச,த,ப வர்க்கம்:- 


‘க’வர்க்கம்:-க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ


‘ச’வர்க்கம்:-ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ


‘த’வர்க்கம்:-த,தா,தி,தீ,து,தூ,தெதே,தை,தொ,தோ,தௌ


‘ப’வர்க்கம்:- ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ


இவையே இவற்றின் வர்க்க எழுத்துகள்.


(2) நிலைமொழியில் ஊற்று எழுத்து குறில் எழுத்தாக அமைய வேண்டும். 


வல்லினம் மிகும் இடங்கள்:-


     வல்லினம் மிகும் இடங்கள் மொத்தம் இருபத்திரண்டு அவை,

  

1.சுட்டெழுத்துகளின் பின் வலி மிகும்:- 

     (சுட்டெழுத்துகள் அ,இ,உ)

“அ,இ,உ, தனி வரின் சுட்டே”(நன்னூல்)


(எ.கா)அ+பெட்டி =அப்பெட்டி, இ+சொல்= இச்சொல்

உ+பக்கம்= உப்பக்கம்.

(செய்யுளில் மட்டுமே ‘உ’பயன்படுத்தபடுகிறது.)


2. வினா எழுத்தான ‘எ’ என்பதற்கு பின் வலி மிகும்:-

(எ.கா) எ+பக்கம்=எப்பக்கம், எ+செடி=எச்செடி


3.’அந்த,இந்த’ எனும் சுட்டுப் பெயர்கள் பின் வலி மிகும்:-

(எ.கா) அந்த+பையன்=அந்தப்பையன்; இந்த+கடை=இந்தக்கடை


4.’எந்த’ எனும் வினாசொல்லின் பின் வலி மிகும்:-

   (எ.கா) எந்த+செய்தி=எந்தச்செய்தி;எந்த+படை=எந்தப்படை


5.இரண்டாம் வேற்றுமை உருபின் பின் வலி மிகும்:-

(வேற்றுமை உருபுகள்:- எழுவாய்,ஐ,ஆல்,கு,இன்,அது,கண்)

(இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ)

(எ.கா) கண்ணனை+பார்த்தேன்= கண்ணனைப் பார்த்தேன்; அவனை+தொட்டேன்=அவனைத்தொட்டேன்


6. நான்காம் வேற்றுமை உருபின் பின் வலி மிகும்:-

(நான்காம் வேற்றுமை உருபு:- கு)

(எ.கா)

 அவனுக்கு+சொல்=அவனுக்குச்சொல்

இவனுக்கு+தா=இவனுக்குத்தா


7.’’என,ஆக’ என்னும் சொல் உருபுகளின் பின் வலி மிகும்:-

(எ.கா) என+சொல்=எனச்சொல்;


அவனாக+சொன்னான்=அவனாகச்சொன்னான்


8.(அதற்கு,இதற்கு,எதற்கு’) எனும் சொற்களின் பின் வலி மிகும்:-

(எ.கா) அதற்கு+சொன்னேன்=அதற்க்குச்சொன்னேன்

இதற்கு+செல்=இதற்குச்செல்; எதற்கு+தண்ணீர்=எதற்குத்தண்ணீர்


9.’இனி,தனி,’ எனும் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) இனி+கண்டேன்=இனிக்கண்டேன்; தனி+சிறப்பு=தனிச்சிறப்பு


10.’’மிக’’ எனும் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) மிக+பெரியது=மிகப்பெரியது;மிக+சிறியது=மிகச்சிறியது


12.ஒரேழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும்:-


(எ.கா) பூ+செடி=பூச்செடி; தீ+பற்றியது=தீப்பற்றியது;தை+பொங்கல்=தைப்பொங்கல்

13. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பின் வலி மிகும்:-

(எ.கா) ஓடா+குதிரை=ஒடாக்குதிரை; கேளா=செவி=கேளாச்செவி; கனா+கண்டேன்=கனாக்கண்டேன்.


14.வன்றொடர் குற்றியலுகரம் நிலைமொழியாக இருந்தால் வலி மிகும்:-


(எ.கா) கேட்டு+கொண்டேன்=கேட்டுக்கொண்டேன்;

பெற்று+தேர்ந்தேன்=பெற்றுத்தேர்ந்தேன்; விற்று+சென்றான்=விற்றுச்சென்றன்


 15.’அகர,இகர,’ ஈற்று வினையெச்சம் புணர்கையில் வலி மிகும்:-

(எ.கா) பாட+சென்றேன்=பாடச்சென்றேன்; தேடி+சோறு=தேடிச்சோறு


16.ஆறாம் வேற்றுமை தொகை மறைந்து வரும்போதும் வலி மிகும்:-

(எ.கா) புலி+தோல்=புலித்தோல்(புலியினது தோல்); புளி+சோறு=புளிச்சோறு


17.’’கிழக்கு,வடக்கு’’ என்னும் திசைப்பெயர்களின் பின் வலி மிகும்:-


(எ.கா) கிழக்கு+திசை=கிழக்குத்திசை;வடக்கு+பக்கம்=வடக்குப்பக்கம்


18.இருபெயரொட்டு பண்புத்தொகை பின் வலி மிகும்:-

(எ.கா) மல்லிகை+பூ=மல்லிகைப்பூ

சித்திரை+திங்கள்=சித்திரைத்திங்கள்


19.உவமைத்தொடர் பின் வலி மிகும்:-

(எ.கா) தாமரை+பாதம்=தாமரைப்பாதம்


20.’சால,தவ’ எனும் உரிச்சொல் தொடர் பின் வலி மிகும்:-

(எ.கா) சால+சிறந்தது=சாலச்சிறந்தது,

தவ+பெரிது=தவப்பெரிது


21.நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) கறி+குழம்பு=கறிக்குழம்பு;

பாட்டு+போட்டி=பாட்டுப்போட்டி; 


22.தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’கார எழுத்தின் பின் வலி மிகும்:-

(எ.கா) அவனா+சொன்னன்=அவனாச்சொன்னன்;கனா+கண்டேன்=கனாக்கண்டேன். 

இவையே வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

            நன்றி

இப்படிக்கு:- அ.அசார்தீன்,

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

பழநி.இவையே வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

            நன்றி

இப்படிக்கு:- அ.அசார்தீன்,

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

பழநி.

6 comments:

  1. பாராட்டுகள் தோழர்!
    (2) நிலைமொழியில் ஊற்று எழுத்து குறில் எழுத்தாக அமைய வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வரிசை எண் 5, 12, 13, 18,19, 22
    - நிலைமொழி ஈற்றில் நெடில் உள்ளது

    ReplyDelete
  2. வரிசை எண் 22
    முதல் எ-டு. அவனா
    தனிக்குறிலை அடுத்து வந்த ஆகாரம் - ×
    குறிலிணை

    ReplyDelete
  3. எழுத்துப் பிழைகள்
    4ஆம் வரி ஈட்ரெழுத்து
    8. = அதற்க்கு ×
    12. ஒரேழுத்து
    22. சொன்னன்

    ReplyDelete
  4. வல்லினம் மிகும் இடங்கள் மொத்தம் இருபத்திரண்டு அவை,

    22 மட்டுமா? இன்னுமுள....!?

    ReplyDelete
  5. வர்க்க ×
    வருக்க

    ReplyDelete
  6. 21. வந்த பையன் (உயிரீறு)
    - வலி மிகாது. ...?

    ReplyDelete

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...