Sunday, 31 July 2022

யாப்பு - செய்யுள் உறுப்பு அசை




அசை 

யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் முதலாவதான எழுத்து என்ற உறுப்பைப் பற்றி சென்ற பதிவில் கண்டோம். எழுத்து உறுப்பு படித்துவிட்டு அசை என்ற அடுத்த உறுப்பை படித்தால் சிறப்பாக இருக்கும். எழுத்து படிக்காதவர்கள் கீழே உள்ள தளத்திற்கு சென்று எழுத்து என்ற யாப்பு உறுப்பை படித்து பயன்பெறவும்.

யாப்பு - எழுத்து உறுப்பு


யாப்பு உறுப்பு அசை :-

        யாப்பு உறுப்பில் அடுத்ததாக உள்ள உறுப்பு அசை. "எழுத்து" என்பதறக்கு "எழுதப்படுதலின் எழுத்து" என்ற மேற்கோள் கொடுத்தது போல, "அசை" என்பதை "எழுத்து அசைத்து இசைகோடலின் அசை" என்று மேற்கோள் கொடுப்பர்.

   அதாவது எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஏற்ப ஒலித்துக் கணக்கிடுவது அசையாகும்.

     இந்த அசையானது எழுத்துக்களால் ஆக்கப்பட்டு சீர்க்கு உறுப்பக வரும். எழுத்துக்கள் ஒன்றோ, பலவோ இணைந்து அசையாகின்றன.

   இதனை புலவர் குழந்தை "யாப்பு என்னும் அணிமணியின் அடிப்படை அசை" என்பார்.

 யாப்பிலக்கணக்காரர்கள்  மொத்தம் இரண்டு அசை உள்ளது என்று வரையறை செய்துள்ளனர்.அவை

  1. நேரசை  2. நிரையசை  இவற்றுள்,

நேரசை என்பது 

   1.     குறில் தனித்து வந்தாலோ  - க

   2. நெடில் தனித்து வந்தாலோ  -  கா

   3. குறிலடுத்து ஒற்று வந்தாலோ  -  கல்

  4. நெடில் அடுத்து ஒற்று வந்தாலோ  - கால்

நேரசை என கணக்கிடப்படும்.


நிரையசை என்பது :-


1. இரு குறில் தனித்து வந்தாலோ -  பல

2. குறில் நெடில் தனித்து வந்தாலோ  -  பலா

3.இருகுறில் அடுத்து ஒற்று வந்தாலோ  - பலர்

4.குறில் நெடில் அடுத்து ஒற்று வந்தாலோ  - பலார்

நிரையசை என கணக்கிடப்படும்.


இதனை யாப்பருங்கலம்

குறிலே நெடிலே குறலிணை ஏனைக் குறில்நெடிலே

நெறியே வரினும் நிறைந்தொற்று அடுப்பினும் நேர்நிரை என்று

அறிவேய்புரையும் மென்தோளி! உதாரணம் ஆ, ழி, வெள், வேல்

வெறியே சுறா, நிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே

என்ற காரிகை எடுத்துரைக்கிறது.

 

நேரசை

 

நிரையசை

 

குறில் தனித்து வருதல்

இருகுறில் இனைந்து வருதல்

பல

நெடில் தனித்து வருதல்

கா

குறில் நெடில் தனித்து வருதல்

பலா

குறிலடுத்து ஒற்று வருதல்

கல்

இருகுறில் அடுத்து ஒற்று வருதல்

பலர்

நெடிலடுத்து ஒற்று வருதல்

கால்

குறில்நெடில் அடுத்து ஒற்று வருதல்

பலார்


இவையே அசைக்கான விளக்கங்கள் ஆகும் . 


உங்களுக்காக :-

        அ. அசார்தீன் (எம்.ஏ., எம்.பில் )

        தமிழ்த்துறை உயராய்வு மையம்,

        பழனி - 624601

என்னுடைய பிற பதிவுகளை காண கீழே உள்ள தளங்களுக்கு  செல்லவும் 

யாப்பு - எழுத்து                 ஆறாம் வகுப்பு - இன எழுத்து   

                           வல்லினம் மிகும் இடம் 


என்னுடைய வலையொலி (Youtube) தளத்தில் என்னை பின் தொடர  உடனே கீழே உள்ள Youtube தளத்திற்குசென்று  subscribe செய்யவும்.

Youtube Iink

Saturday, 30 July 2022

MKU | M.PHIL TAMIL SYLLABUS PDF

 

Downlode link

MKU MPHIL TAMIL SYLLABUS DOWNLODE LINK

இத்தளத்தின் பிற பதிவுகளுக்கு

12ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு செல்ல

 12th Tamil


வல்லினம் மிகும் இடங்கள் - காண

வல்லினம் மிகும் இடங்கள்


இன எழுத்துக்களை பற்றி காண்பதற்கு

இன எழுத்துக்கள்

யாப்பு - எழுத்து உறுப்பு



 யாப்பிலக்கணம் எழுத்து 


யாப்பிலக்கணம் குறிப்பு :-

       யாத்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல்லே யாப்பு எனப்படுகிறது.

 யாத்தல் என்பதற்கு "கட்டுதல்" என்று பொருள்.

 எழுத்து முதல் தொடை ஈறாக கொண்ட உறுப்புகளை ஒன்றாக கட்டி பாடல் ஒன்றை உருவாக்குவது யாப்பு. 

  இந்த யாப்பிலக்கணமானது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்ற பெயரில் அமைந்து  ஒரு இயலாக உள்ளது.

 இந்த "செய்யுளியலை" முன்வைத்தே பிற்கால இலக்கணிகள் படைத்ததே இந்த யாப்பிலக்கணம்.

 தொல்காப்பியரை தொடர்ந்து யாப்பிலக்கணத்தை எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டதே "யாப்பருங்கலக் காரிகை" இதன் ஆசிரியர் "அமிர்த சாகரர்".

  அமிர்தசாகரரின் இந்த யாப்பருங்கலத்திற்கு குணசாகரர் உரை எழுதியுள்ளார்.

    "யாப்பருங்கலக் காரிகை" முழுவதும் "கட்டளை கலித்துறையால்" எழுதப்பட்டவை.

     "யாப்பருங்கலக் காரிகை" முழுவதும் "மகடூஉ முன்னிலை" வைத்து எழுதப்பட்ட நூலாக இருக்கின்றது.

  " மகடூஉ" என்பதற்கு பெண் என்பது பொருள்.

  யாப்பிலக்கண செய்யுளின் முடிவில் "ஒரு பெண்ணை மையமிட்ட ஒரு தகவல் இடம்பெற்றிருப்பதாக அமைத்துள்ளார் இலக்கணி.

  யாப்பருங்கலக்காரிகை மொத்தம் 44 காரிகைகளை (நூற்பாக்களை) கொண்டது.

 யாப்பில் உள்ள காரிகைகளின் மொத்த எழுத்துக்கள் 2908.

   யாப்பருங்கலக்காரிகை மொத்தம்" மூன்று" இயலோடு  44 காரிகைகளை கொண்டுள்ளது.

    1. உறுபியல் - 20 காரிகைகள்

    2. செய்யுளியல் - 15 காரிகைகள்

     3. ஒழிபியல் - 9 காரிகைகள்

மொத்தம் - 44 காரிகைகள்


இந்த யாப்பிலக்கணமானது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, போன்ற உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இவற்றுள் முதலாவதாக உள்ள எழுத்து என்ற உறுப்பை பற்றி கீழே காணலாம். 

எழுத்து :-  

          " எழுதப்படுதலின் எழுத்து" 

நாம் எழுதுவதெல்லாம் எழுத்து. ஆனால் யாப்பிலக்கணத்தில் எழுத்து என்பது அசைக்கு உறுப்பாக வருபவையே. அசைக்கு உறுப்பாக வரக்கூடிய எழுத்துக்கள் மொத்தம் 12. அவை

1. உயிர்க்குறில் 2. உயிர்நெடில் 3. குற்றியலுகரம் 4. குற்றியலிகரம் 5. ஐகாரக்குறுக்கம் 6. ஆய்தம் 7. வல்லினம் 8. மெல்லினம் 9. இடையினம் 10. உயிரெழுத்து (216)) 11. உயிரளபெடை 12. ஒற்றளபெடை 

 ஆகிய பன்னிரண்டும் அசைக்க உறுப்பாக வரக்கூடிய எழுத்துக்கள். இதனை யாப்பிலக்கண முதல்  காரிகை மூலம் காணலாம்.


" குறில் நெடில் ஆவிகுறுகிய மூஉயிர் ஆய்தம் மெய்யே

 மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்

 சிறுநுதல் பேரமர்க்கண் செய்யவாய் ஐயநுண் இடையாய்!

 அறிஞர் உரைத்த அளபும் அசைக்கு உறுப்(பு)ஆவணவே"

என்ற முதல் காரிகை விளக்குகிறது.

        நன்றி



மேற்காணும் இலக்கணத்தை Pdf வடிவில் காண

யாப்பு - எழுத்து


இவண் :-

    அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்)

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

 பழனி - 624601


இத்தளத்தில் உள்ள பிற இலக்கணங்களுக்கு

 பிற இலக்கணங்களை காண


Friday, 29 July 2022

ஆறாம் வகுப்பு தமிழ் - இன எழுத்துக்கள்

 இன எழுத்துக்கள்


  •      உருவத்தால் அல்லது ஒலியால் ஒன்று போல் இருக்கும் எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். தமிழ் மொழியில் இன எழுத்துக்கள் ஒலியின் அடிப்படையில் அமைகின்றன. 
  • உயிரெழுத்துகளில் குறிலுக்கு அந்தந்த நெடில் எழுத்துக்கள் இனமாகும் 


அவையாவன


1) அ-ஆ 

2)இ-ஈ-ஐ

3)உ-ஊ-ஔ

4)எ-ஏ

5)ஒ-ஓ


இதை உச்சரிச்சு பாருங்கள் உங்களுக்கே புரியும் 


அதே போல மெய்யெழுத்தில்


1)க்-ங் (எ.கா= தங்கம்) 

2)ச்-ஞ் (எ. கா=பஞ்சம்) 

3)ட்-ண்(எ.கா=வண்டு)

4)த்-ந் (எ.கா=பந்து)

5)ப்-ம் (எ. கா = ஓரிடங்களில் மட்டும் ) 

6)ற்-ன் (எ. கா=நன்று) 

7)ய்,ர்,ல்,வ்,ழ்,ள் (இவை ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டும் இனமாக பயன்படும்) 


கீழே உள்ள வரி மரபுப் படத்தில் காணுங்கள்

படத்தை தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

DOWNLOAD MIND MAP LINK 

இன எழுத்துக்கள் - MIND MAP


மேலே உள்ளவற்றை புத்தகவடிவில் (Pdf) வடிவில் பெறுவதற்கு கீழே உள்ள தளத்திற்கு செல்லவும்

Downlode Pdf - Touch The Link

நன்றி

இத்தளத்தில் உள்ள மேலும் பல பாடங்கள் தொடர்பான செய்திகளுக்கு கீழே உள்ள தளங்களுக்கு செல்லவும் 👇👇

வல்லினம் மிகும் இடங்கள்    12th Tamil 


இவண் :- 

  அ. அசார்தீன் (எம்.ஏ.,எம்ஃபில்)

தமிழ்த்துறை உயராய்வு மையம், 

     பழனி - 624601


வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள்.


வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது, நிலைமொழியின் ஈட்ரெழுத்தில் ஒரு வல்லின மெய் இணைவதே வல்லினம் மிகுதல் எனப்படும்.


வல்லின எழுத்துக்களில் மிகும் எழுத்துக்கள் :-


               “க்,ச்,ட்,த,ப்,ற்” என்னும் ஆறு எழுத்துக்கள் தமிழில் வல்லினம் எழுத்துகளாக உள்ளன. இந்த வல்லின எழுத்துகளில் “க்,ச்,த்,ப்” ஆகிய நான்கு எழுத்துக்கள் மட்டுமே வல்லினம் மிகும் எழுத்துகளாக இருக்கின்றன. 

         இதனை நன்னூல் எனும் இலக்கண நூல்.


    “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

    கசதப மிகும் விதவாதன மன்னே”

                                           என்று கூறுகிறது.


 “ட்,ற்” ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழி முதலில் வராது அதனால் இரண்டும் வல்லினம் மிகும் இடங்களிலும் வராது.


(1)வல்லின மிகும் இடங்களுக்கு குறிப்பாக வருமொழியின் முதல் எழுத்து “க,ச,த,ப” வர்க்கமாக இருக்க வேண்டும்.


க,ச,த,ப வர்க்கம்:- 


‘க’வர்க்கம்:-க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ


‘ச’வர்க்கம்:-ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ


‘த’வர்க்கம்:-த,தா,தி,தீ,து,தூ,தெதே,தை,தொ,தோ,தௌ


‘ப’வர்க்கம்:- ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ


இவையே இவற்றின் வர்க்க எழுத்துகள்.


(2) நிலைமொழியில் ஊற்று எழுத்து குறில் எழுத்தாக அமைய வேண்டும். 


வல்லினம் மிகும் இடங்கள்:-


     வல்லினம் மிகும் இடங்கள் மொத்தம் இருபத்திரண்டு அவை,

  

1.சுட்டெழுத்துகளின் பின் வலி மிகும்:- 

     (சுட்டெழுத்துகள் அ,இ,உ)

“அ,இ,உ, தனி வரின் சுட்டே”(நன்னூல்)


(எ.கா)அ+பெட்டி =அப்பெட்டி, இ+சொல்= இச்சொல்

உ+பக்கம்= உப்பக்கம்.

(செய்யுளில் மட்டுமே ‘உ’பயன்படுத்தபடுகிறது.)


2. வினா எழுத்தான ‘எ’ என்பதற்கு பின் வலி மிகும்:-

(எ.கா) எ+பக்கம்=எப்பக்கம், எ+செடி=எச்செடி


3.’அந்த,இந்த’ எனும் சுட்டுப் பெயர்கள் பின் வலி மிகும்:-

(எ.கா) அந்த+பையன்=அந்தப்பையன்; இந்த+கடை=இந்தக்கடை


4.’எந்த’ எனும் வினாசொல்லின் பின் வலி மிகும்:-

   (எ.கா) எந்த+செய்தி=எந்தச்செய்தி;எந்த+படை=எந்தப்படை


5.இரண்டாம் வேற்றுமை உருபின் பின் வலி மிகும்:-

(வேற்றுமை உருபுகள்:- எழுவாய்,ஐ,ஆல்,கு,இன்,அது,கண்)

(இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ)

(எ.கா) கண்ணனை+பார்த்தேன்= கண்ணனைப் பார்த்தேன்; அவனை+தொட்டேன்=அவனைத்தொட்டேன்


6. நான்காம் வேற்றுமை உருபின் பின் வலி மிகும்:-

(நான்காம் வேற்றுமை உருபு:- கு)

(எ.கா)

 அவனுக்கு+சொல்=அவனுக்குச்சொல்

இவனுக்கு+தா=இவனுக்குத்தா


7.’’என,ஆக’ என்னும் சொல் உருபுகளின் பின் வலி மிகும்:-

(எ.கா) என+சொல்=எனச்சொல்;


அவனாக+சொன்னான்=அவனாகச்சொன்னான்


8.(அதற்கு,இதற்கு,எதற்கு’) எனும் சொற்களின் பின் வலி மிகும்:-

(எ.கா) அதற்கு+சொன்னேன்=அதற்க்குச்சொன்னேன்

இதற்கு+செல்=இதற்குச்செல்; எதற்கு+தண்ணீர்=எதற்குத்தண்ணீர்


9.’இனி,தனி,’ எனும் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) இனி+கண்டேன்=இனிக்கண்டேன்; தனி+சிறப்பு=தனிச்சிறப்பு


10.’’மிக’’ எனும் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) மிக+பெரியது=மிகப்பெரியது;மிக+சிறியது=மிகச்சிறியது


12.ஒரேழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும்:-


(எ.கா) பூ+செடி=பூச்செடி; தீ+பற்றியது=தீப்பற்றியது;தை+பொங்கல்=தைப்பொங்கல்

13. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பின் வலி மிகும்:-

(எ.கா) ஓடா+குதிரை=ஒடாக்குதிரை; கேளா=செவி=கேளாச்செவி; கனா+கண்டேன்=கனாக்கண்டேன்.


14.வன்றொடர் குற்றியலுகரம் நிலைமொழியாக இருந்தால் வலி மிகும்:-


(எ.கா) கேட்டு+கொண்டேன்=கேட்டுக்கொண்டேன்;

பெற்று+தேர்ந்தேன்=பெற்றுத்தேர்ந்தேன்; விற்று+சென்றான்=விற்றுச்சென்றன்


 15.’அகர,இகர,’ ஈற்று வினையெச்சம் புணர்கையில் வலி மிகும்:-

(எ.கா) பாட+சென்றேன்=பாடச்சென்றேன்; தேடி+சோறு=தேடிச்சோறு


16.ஆறாம் வேற்றுமை தொகை மறைந்து வரும்போதும் வலி மிகும்:-

(எ.கா) புலி+தோல்=புலித்தோல்(புலியினது தோல்); புளி+சோறு=புளிச்சோறு


17.’’கிழக்கு,வடக்கு’’ என்னும் திசைப்பெயர்களின் பின் வலி மிகும்:-


(எ.கா) கிழக்கு+திசை=கிழக்குத்திசை;வடக்கு+பக்கம்=வடக்குப்பக்கம்


18.இருபெயரொட்டு பண்புத்தொகை பின் வலி மிகும்:-

(எ.கா) மல்லிகை+பூ=மல்லிகைப்பூ

சித்திரை+திங்கள்=சித்திரைத்திங்கள்


19.உவமைத்தொடர் பின் வலி மிகும்:-

(எ.கா) தாமரை+பாதம்=தாமரைப்பாதம்


20.’சால,தவ’ எனும் உரிச்சொல் தொடர் பின் வலி மிகும்:-

(எ.கா) சால+சிறந்தது=சாலச்சிறந்தது,

தவ+பெரிது=தவப்பெரிது


21.நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின் பின் வலி மிகும்:-

(எ.கா) கறி+குழம்பு=கறிக்குழம்பு;

பாட்டு+போட்டி=பாட்டுப்போட்டி; 


22.தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’கார எழுத்தின் பின் வலி மிகும்:-

(எ.கா) அவனா+சொன்னன்=அவனாச்சொன்னன்;கனா+கண்டேன்=கனாக்கண்டேன். 

இவையே வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

            நன்றி

இப்படிக்கு:- அ.அசார்தீன்,

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

பழநி.இவையே வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

            நன்றி

இப்படிக்கு:- அ.அசார்தீன்,

தமிழ்த்துறை உயராய்வு மையம்,

பழநி.

Thursday, 28 July 2022

12 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 2

இயல் - 2 

செய்யுள்  - கவிதைப்பேழை

நெடுநல்வாடை


நெடுநல்வாடை பெயர்க் காரணம் :-

                    (நெடு+நல்+வாடை)  நீண்ட நாட்களாக இருக்கும் வாடைக்காற்று, அந்த வாடைக்காற்று யாருக்கு துன்பம் தருகிறது, யாருக்கு இன்பம் தருகிறது என்பதைக் கூறுவது நெடுநல்வாடை .  போர் பாசறையில் காலை முதல் மாலை வரை போர் செய்ததன் காரணமாக தனது பாசறையில் உடலில் புண்களுடன் இருக்கும் வீரனுக்கு அங்கே வீசக்கூடிய காற்று இன்பமாகவும், தனது தலைவனை பிரிந்து தலைவி வீட்டிலே வாடுகிறாள் அப்போது அங்கு வீசும் காற்று துன்பம் தருவதாக இருக்கிறது.  

நெடுநல்வாடை குறிப்பு :-  

                மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடை தலைவனாகக் கொண்டு மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவர் எழுதியது நெடுநல்வாடை. 

                இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

                188 அடிகளை கொண்டது.

                ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டது. 

பாடல்:- 

            வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

        பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன

        ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

        ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

        புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

        நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ   

        மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

        கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

        மாமேயல் மறப்ப மந்தி கூரப்

        பறவை படிவன வீலக் கறவை

        கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்

        குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் 

            [பாவகை - நேரிசை ஆசிரியப்பா]

பாடல் சூழ்நிலை :-

       திடீரென வந்த கடும் மழையின் தாக்கத்தை கோவலர்கள் எவ்வாறு சமாளித்தனர் என்பதே இந்த பாடலின் சூழ்நிலை.

திணை விளக்கம் :- 

        நெடுநல்வாடையில்  "வாகை" திணை இடம்பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகை பூவைச் சூடி வெற்றியை வாகைத் திணை.  

துறை விளக்கம்:- 

        நெடுநல்வாடையில்  "கூதிர்ப்பாசறை" துறை இடம்பெற்றுள்ளது. போர் தொடுத்து செல்லும் அரசன் குளிர் காலத்தில் தான் தாங்கும் வீடாக அமைப்பதே "கூதிர் பாசறை". 

பாடலின் விளக்கம் : 


இந்த வலையொலி தளத்திற்கு செல்லவும்.

Wednesday, 27 July 2022

9th Tamil Quiz

 9 ஆம் வகுப்பு தமிழ் - நூல்களும் அதன் ஆசிரியர்களும் 


Quiz link

https://forms.gle/rw17ZY1Zm3pfQPKo6

நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...