இயல் - 2
செய்யுள் - கவிதைப்பேழை
நெடுநல்வாடை
நெடுநல்வாடை பெயர்க் காரணம் :-
(நெடு+நல்+வாடை) நீண்ட நாட்களாக இருக்கும் வாடைக்காற்று, அந்த வாடைக்காற்று யாருக்கு துன்பம் தருகிறது, யாருக்கு இன்பம் தருகிறது என்பதைக் கூறுவது நெடுநல்வாடை . போர் பாசறையில் காலை முதல் மாலை வரை போர் செய்ததன் காரணமாக தனது பாசறையில் உடலில் புண்களுடன் இருக்கும் வீரனுக்கு அங்கே வீசக்கூடிய காற்று இன்பமாகவும், தனது தலைவனை பிரிந்து தலைவி வீட்டிலே வாடுகிறாள் அப்போது அங்கு வீசும் காற்று துன்பம் தருவதாக இருக்கிறது.
நெடுநல்வாடை குறிப்பு :-
மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடை தலைவனாகக் கொண்டு மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவர் எழுதியது நெடுநல்வாடை.
இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
188 அடிகளை கொண்டது.
ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டது.
பாடல்:-
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன
ஆர்கலி முனைஇய
கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை
வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு
கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி
நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர்
கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீலக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய
வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
[பாவகை - நேரிசை ஆசிரியப்பா]
பாடல் சூழ்நிலை :-
திடீரென வந்த கடும் மழையின் தாக்கத்தை கோவலர்கள் எவ்வாறு சமாளித்தனர் என்பதே இந்த பாடலின் சூழ்நிலை.
திணை விளக்கம் :-
நெடுநல்வாடையில் "வாகை" திணை இடம்பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகை பூவைச் சூடி வெற்றியை வாகைத் திணை.
துறை விளக்கம்:-
நெடுநல்வாடையில் "கூதிர்ப்பாசறை" துறை இடம்பெற்றுள்ளது. போர் தொடுத்து செல்லும் அரசன் குளிர் காலத்தில் தான் தாங்கும் வீடாக அமைப்பதே "கூதிர் பாசறை".
பாடலின் விளக்கம் :
இந்த வலையொலி தளத்திற்கு செல்லவும்.
No comments:
Post a Comment