காளிக்குக் கூளி கூறியது
பாடல் :-
" மா ஆயிரமும் படக், கலிங்கர்
மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நா ஆயிரமும் கேட்போர்க்கு
நாள் ஆயிரமும், வேண்டுமால்!"
விளக்கம் :-
கலிங்க நாட்டில் நடந்த போரில் ஆயிரம் யானைகள் வீழ்த்தப்பட்டதையும், கலிங்க வீரர்கள் பலர் வீழ்த்தப்பட்டதையும் கூறுவதற்கு ஆயிரம் நாக்குகளும், அதை கேட்பதற்கு ஆயிரம் நாட்களும் வேண்டும் என்று காளி (தேவி) க்கு பேய்கள் கூறின.
பாடல் 2 :-
" ஒருவர்க்கு ஒருவாய் கொண்டு உரைக்க
ஒண்ணா தேனும் உண்டாகும்
செருவைச் சிறியேனும் விண்ணப்பம்
செய்யச் சிறிது கேட்பாயாக!"
விளக்கம் :-
கலிங்க நாட்டில் நிகழ்ந்த போரைப்பற்றி ஒருவரே வாயால் (தனது வாயால்) முழுவதுமாக கூற முடியாது. எனினும் சிறியவனாகிய நான் சிறிதளவு கூறுகின்றேன். அதனைக் காளி (தேவி) யே கேட்பாயாக.
பாடல் 3 :-
" பார் எலாம் உடையான் அபயன் கொடைப்
பங்கயக் கரம் ஒப்பெனப் பண்டார் நாள்
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை
காஞ்சனம் பொழி காஞ்சி அதன்கணே"
விளக்கம் :-
அபயன் என்ற முதற்குலோத்துங்கச் சோழன் எல்லா உலகங்களையும் தனக்கே உரிமையாகக் கொண்டிருந்தவன். மேலும், அவன் இரப்பவர்க்கு ஈகின்ற குணமுடையவனாக விளஙங்கினான். அவனுடைய கை தாமரை மலர் போன்றது. அவனது கையின் வண்மைக்கு ஒப்பு என்று சொல்லும்படியாக ஒரு காலத்தில் காஞ்சிமா நகரில் மேகங்கள் எல்லாம் வானில் திரண்டு எழுந்து ஏழரை நாழிகை (மணிநேரம்) பொன் மழையகப் பொழிந்தன.


No comments:
Post a Comment