மொழி முதல், இறுதி எழுத்துக்கள்
மொழிகள் அனைத்தும் எழுத்தொலிகளால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும், இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகளே காரணாமாக அமைகின்றன.
இங்கே மொழி என்பது சொல் என்ற மற்றொரு பெயரைக் கொண்டுள்ளது. இந்த சொல்லானது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்ற அல்லது சேர்கின்ற அல்லது இணைகின்ற சொற்புணர்ச்சியின் அடிப்படையில் இயங்குகின்றன. அவை சந்திக்கும் போது அல்லது சேரும் போது முதல் சொல்லின் கடைசி எழுதும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்துமே சேர்கின்றன, சந்திக்கின்றன.
இவற்றை வைத்தே மொழி முதல் எழுத்தும், இறுதி எழுத்துகளையும் நாம் கணக்கிடுகின்றோம். மொழிக்கு முதலில் அதாவது சொல்லுக்கு முதலில் எந்தெந்த எழுத்தக்கள் வரும், எந்தெந்த எழுத்துக்கள் இறுதியாக வரும் என்பன குறித்த பதிவே இது.
மொழி முதல் எழுத்துக்கள்:-
மொழி முதல் எழுத்துக்கள் அதாவது இங்கே மொழி என்பது ஒரு சொல்லையே குறிக்கின்றது அதனால் இதனை சொல் முதல் எழுத்து என்றே மனதில் நிறுத்த வேண்டும். மொழிக்கு அதாவது சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள் மொழி முதல் எழுத்துக்கள் எனப்படும்.
12 உயிரெழுத்துகளும், 10 மெய் எழுத்துகளும் (உயிருடன் கூடி) மொழிக்கு முதலில் வரும். எனவே மொழி முதல் எழுத்துகள் மொத்தம் 22.
உயிர் - தனியாக - இனைந்து :-
12 உயிரெழுத்துகளும் தனியாகவும், மெய்யுடன் இணைந்தும் மொழிக்கு முதலில் வரும்.
சான்று :-
அம்மா, ஆர்வம், இன்பம், ஈகை, உதவி, ஊக்கம், எழில், ஈறு, ஐயம், ஒளி, ஓவியம், ஔவை
மெய் உயிருடன் கூடி :-
க்ச், த்ந், ப்ம், வ்ய், ஞ்ங் என்ற 10 மெய்யெழுத்துக்களும் 12 உயிரெழுத்துகளோடு கூடி உயிர்மெய்யாக மொழிக்கு முதலில் வரும்.
இவற்றுள் க்ச், த்ந், ப்ம் என்ற 6 மெய்கள் மட்டும் எல்லா உயிரெழுத்துகளுடனும் கூடி மொழிக்கு முதலில் வரும். மேலே கூறிய வ்ய், ஞ்ங் ஆகியவை மட்டும் சில எழுத்துகளுடன் மட்டுமே கூடி மொழிக்கு முதலில் வரும். அவற்றுள்
வ் :-
வ் என்னும் மெய்யெழுத்து அஆ, இஈ, எஏ, ஐ, ஔ எனும் 8 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
ய் :-
ய் என்னும் மெய்யெழுத்து அஆ, உஊ, ஒஔ எனும் 6 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
ஞ் :-
ஞ் என்னும் மெய்யெழுத்து அஆ, எஒ என்ற 4 உயிர்களுடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
ங் :-
ங் என்னும் மெய்யெழுத்து 'அ'கரத்துடன் கூடி மொழிக்கு முதலில் வரும்
க் | ங் | த் | ந் | ப் | ம் | வ் | ய் | ஞ் | ங் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
அ | கருணை | சங்கு | தந்தம் | நட்பு | பதவி | மதிப்பு | வரம் | யவனர் | ஞமலி (நாய்) | ஙனம் (அங்ஙனம்-இடம்) |
ஆ | காலம் | சாபம் | தானம் | நாள் | பாடம் | மானம் | வாரம் | யாழ் | ஞாலம் | - |
இ | கிளி | சிற்றுந்து | திறை | நிலை | பிழை | மிருகம் | விருப்பம் | - | - | - |
ஈ | கீற்று | சீற்றம் | தீர்வு | நீட்சி | பீடு | மீன் | வீடு | - | - | - |
உ | குடும்பம் | சுத்தம் | துன்பம் | நுணுக்கம் | புகழ் | முயற்சி | - | யுகம் | - | - |
ஊ | கூலி | சூழ்ச்சி | தூய்மை | நூல் | பூட்டு | மூப்பு | - | யூகம் | - | - |
எ | கெண்டி | செடி | தெளிவு | நெறி | பெருமை | மென்மை | வெற்றி | - | ஞெகிழி(கொள்ளிக்கட்டை) | - |
ஏ | கேண்மை | சேறு | தேர்வு | நேர்மை | பேராண்மை | மேன்மை | வேள்வி | - | - | - |
ஐ | கை | சைகை | தை | நைதல்(இளைத்தல்) | பை | மை | வை | - | - | - |
ஒ | கொடி | சொற்பம் | தொழில் | நொடி | பொலிவு | பொட்டு | ஞொள்கல்(சுருங்குதல்) | |||
ஓ | கோபம் | சோகம் | தோல்வி | நோய் | போட்டி | மோகம் | - | யோகம் | - | - |
ஔ | கௌவுதல் | சௌந்தர்யம் | தௌவை(மூதேவி) | நௌவி(மான்) | பௌவம்(கடல்) | மௌனம் | வௌவுதல் | யௌவனம்(அழகு) | - | - |
- | - | - | - | - | அஆ, இஈ,எஏ, ஐஔ | அஆ,உஊ, ஓஔ | அஆ, எஒ | அ
|
மொழிக்கு அதாவது சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.
அவை :-
உயிர் - 12
மெய் - 11
குற்றியலுகரம் - 1
--------
24
--------
மொழி இறுதி எழுத்துகள் மொத்தம் 24
உயிரெழுத்து :-
உயிரெழுத்துகள் 12ம் தனியாகவும், மெய்யெழுத்துகளுடனும் இணைந்தும் மொழிக்கு இறுதியில் வரும்.
(I) தனியாக :-
(i) நெடில் ;-
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய 7 உயிர் நெடில் எழுத்துகளும் ஒரேழுத்து ஒருமொழியாக மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும்.
சான்று :-
ஆ - பசு
ஈ - சிறிய பறவை (House Fly)
ஊ - ஊன் (இறைச்சி,தசை)
ஏ - உயர்வு, பெருமை
ஐ - அழகு, பெற்றோர், வியப்புக்குறி
ஓ - ஐயம், ஞாபகம், ஒழிவு
ஔ - நிலம் அழைத்தல், அனந்தன் எனும் பாம்பு
(ii) குறில் :-
அ, இ, உ, எ, ஒ எனும் 5 உயிர்க்குறில் எழுத்துகளும் அளபெடையாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
1. பலாஅ
2. தீஇ
3. பூஉ
4. சேஎ ( சிவப்பு, காளை, வெறுப்புக்குறி
5. கோஒ ( அரசன்)
(II) மெய்யுடன் :-
'எ'கரம் தவிர பிற உயிர்கள் மெய்யுடன் கூடி மொழிக்கு இறுதியில் வரும்.
1. பல (அ)
2. பலா (ஆ)
3. கிளி (இ)
4. தீ (ஈ)
5. சுடு (உ)
6. பூ (ஊ)
7. நொ (ஒ)
8. கோ (ஓ)
9. அவனே (ஏ)
10. தை (ஐ)
11. கௌ (ஔ)
மெய்யெழுத்து :-
மெய்யெழுத்துகளுள் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 எழுத்துகளும் மொழிக்கு இறுதியில் வரும்.
சான்று :-
மண், மரம், மான், நாய், யார், பல், யாழ், நாள், உரிஞ் (தேய்த்தல், உராய்தல், பூசுதல்), பொருந் (பொருந்துதல்), தெவ் (பகைவர்).
குற்றியலுகரம் :-
கு, சு, டு, து, பு, று எனும் 6 எழுத்துகளை ஈறாக கொண்ட குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும்.
சான்று:-
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,
ஆகவே இவையே மொழி முதல், இறுதி எழுத்துகளாக உள்ளன.
இந்த பதிவினை குறித்த உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
நன்றி
இங்ஙனம்:-
அ. அசார்தீன் (எம்,ஏ., எம். பில்.,)
தமிழ்த்துறை உயராய்வு மையம்,
பழனி - 624601
No comments:
Post a Comment