கன்னம் வைத்துத் திருடுதல்
நன்றி
இப்படிக்கு :-
அ. அசார்தீன் (எம். ஏ., எம் ஃபில்)
தமிழ்த்துறை உயராய்வு மையம்
பழனி - 624601
கன்னம் வைத்துத் திருடுதல்
நன்றி
இப்படிக்கு :-
அ. அசார்தீன் (எம். ஏ., எம் ஃபில்)
தமிழ்த்துறை உயராய்வு மையம்
பழனி - 624601
நடவுப்பாடல்
![]() |
வேலமரப் பாதையிலே - வேலையா
வேலையில கண்ணிருக்கு - சுப்பையா
வேலியோரம் போகுதுபார் - வேலையா
வேட்டித்துணி போட்டிருக்கோ - சுப்பையா
சித்தாடை கட்டிருக்கு - வேலையா
சின்னக்குட்டி போலிருக்கு - சுப்பையா
கண்ணாடி தோற்குமடா - வேலையா
கண்ணைப் பறிக்குதோடா - சுப்பையா
கொண்டையில பூவிருக்கு - வேலையா
கொளச்சுமுடி போட்டிருப்பா - சுப்பையா
காத்தேனவே பறந்துவாரா - வேலையா
கஞ்சிகொண்டு வாராளோடா - சுப்பையா
கதிரரிவாள் இருக்குதடா - வேலையா
கதிரறுக்கும் காலமல்ல - சுப்பையா
ஆட்டுத்தழை அறுப்பாளாட - வேலையா
அண்டையில வந்துட்டாளோ - சுப்பையா
அன்னம் போல முன்னேவார - வேலையா
அவள் என் அத்தைமவ ரத்தினமட - சுப்பையா
அவள் உரிமையுள்ள புருசனும் நீ - வேலையா
அடுத்த மாசம் பரிசம் வைப்பேன் - சுப்பையா
இப்படிக்கு:-
அ. அசார்தீன் (எம். ஏ., எம்ஃபில்)
தமிழ்த்துறை உயராய்வு மையம்
பழனி - 624601
புறநானூறு
* புறநானூற்றில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. அவற்றில்
138 பாடல்கள் 43 மூவேந்தர்களை பற்றியது
141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியது
121 பாடல்கள் பெயர் தெரியாதோர்.
(138+141+121=400)
''138 மூவேந்தர்களை பற்றியது என்பதில்''
27 பாடல்கள் சேர மன்னர்கள் பற்றியது.
37 பாடல்கள் பாண்டிய மன்னர்கள் பற்றியது.
74 பாடல்கள் சோழ மன்னர்கள் பற்றியது.
(27+37+74=138)
''141 குறுநில மன்னர்கள் என்பதில்''
23-பாடல்கள் அதியமானை பற்றியது.
17-பாடல்கள் வேள்பாரியை பற்றியது.
14-பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியது.
07-பாடல்கள் பேகனைப் பற்றியது.
07-பாடல்கள் குமணனைப் பற்றியது.
06-பாடல்கள் காரியைப் பற்றியது.
05-பாடல்கள் நாஞ்சில் வள்ளுவன் பற்றியது.
05-பாடல்கள் பிட்டங்கொற்றான் பற்றியது.
04-பாடல்கள் எழினியைப் பற்றியது.
(23+17+14+7+7+6+5+5+4=141)
4--குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும்.
6--குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும்.
29--குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடல்களிலும் பாடப்பட்டுள்ளனர்.
157--புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில்.
15--பேர் பெண்பால் புலவர்கள்.
142-பேர் ஆண்பால் புலவர்கள்.
(15+142=157)
மீதமுள்ள 14 பாடல்களைப் பாடியவர்களின் பெயர் தெரியவில்லை.
இது மட்டுமல்லாது.
*புறம்+நான்கு+நூறு=புறநானூறு.
- - புறத்தினை பற்றிய நானூறு பாடல்கள் கொண்ட நூல் இது
*பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடி தொகுக்கப்பட்டது.
*இந்நூலுக்கு புறம், புறப்பாட்டு என்று வேறுபெயர்களும் உண்டு.
*இந்நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*இந்நூல் மூலம் முடியுடை வேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத்தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப்புலவர்கள், எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
*அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறியலாம்.
*எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
*காலம் இரண்டாம் நூற்றாண்டு.
*புறநானூற்றின் சில பாடல்களை ஜி. யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
கொடுக்கிறேன்
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே
இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை
தேவையுள்ளவன் அதிலிருந்து
வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம்
என்பதை மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது பணம் மட்டும்
என்று நினைக்காதே
உன் வார்த்தையும் ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள
நீர்போல் இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை நியாப்படுத்தும்.
முனைவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி
வாணியம்பாடி
PHOTOSHOP, PAGEMAKER, CORALDRAW, MS-WORD, MS-POWERPOINT போன்றவற்றவற்றில் இருந்து உருவாக்கக்கூடிய சான்றிதழ்கள், கட் அவுட்டுகள், திருமண விழா பத்திரிகைகள், விழா நிகழ்ச்சி நிரல்கள், கடை நோட்டிஸ்கள் என பல வித நிகழ்சிகளுக்கு தமிழில் அழகாகவும், மிகவும் எல்லோரும் விரும்பும் வண்ணம் தெளிவாகவும் தங்களது லேப்டாப், கம்ப்யூட்டர்களில் இருக்கவேண்டிய விசைகள் தான் RGB AND SENTHAMIL FONT'S இவைகளை இன்ஸ்டால் செய்து உங்கள் இல்ல விஷேசங்களுக்கு அழகிய பத்திரிகைகளை தயார் செய்யுங்கள். இந்த RGB AND SENTHAMIL FONT'S ஆகிய இரண்டையும் இன்ஸ்டால் செய்யும் முன்பு Keyman என்ற மென்பொருளை முதலில் இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் லேப்டாப், கம்ப்யூட்டரினை Restart செய்துவிட்டு பிறகு RGB AND SENTHAMIL FONT களை இன்ஸ்டால் செய்யுங்கள்.
Step - 1
Keyman software - ஐ பதிவிறக்கம் செய்வதற்கு கீழே உள்ள link க்குள் சென்று அதில் உள்ள Pdf file ஐ Downlode செய்யவும்.
Step - 2
Download செய்த Pdf file ஐ Open பண்ணவும்.
Step - 3
அதில் RGB, Senthamil Font's And Keyman Software link - உள்ளன அவற்றில் சென்று Download செய்யவும்.
இடைநிலைகள்
இக்கட்டுரையில் இடைநிலை என்பதைக் குறித்தும் அதனுடைய வகைகள் குறித்தும் விரிவாகக் காண்போம்
இடைநிலை விளக்கம் :
பகுதிக்கும், விகுதிக்கும் இடைபட்டு நிற்கும் உறுப்பிற்கு இடைநிலை என்று பெயர்.
இடைநிலையின் வகைகள் :
இடைநிலை 2 வகைப்படும்
(1) பெயர் இடைநிலை
(2) வினை இடைநிலை
(1) பெயர் இடைநிலை :
பெயர்ச்சொல்லின் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பிற்கு "பெயர் இடைநிலை" என்று பெயர்.
வினையாலணையும் பெயர் மட்டும் வினையைச் சார்ந்து வருவதால் வினைக்குரிய இடைநிலையே அதற்கும் பொருந்தும்.
பெயர் இடைநிலைகள் :
ஞ், ந், வ், ச், த், இச்சி ஆகிய ஆறும் பெயர் இடைநிலைகள்.
உறுப்புகள் | எடுத்துகாட்டு |
---|---|
ஞ் | அறிஞன் |
ந் | பொருநன் |
வ் | தலைவன் |
ச் | இடைச்சி |
த் | குறத்தி, உழத்தி |
இச்சி | தச்சிச்சி, ஆச்சி |
உறுப்புகள் | எடுத்துகாட்டுகள் | பிரிப்பு |
---|---|---|
த் | கொடுத்தான் | கொடு + த் + த் + ஆன் |
ட் | கேட்டான் | கேள் + ட் + ட் + ஆன் |
ற் | பெற்றான் | பெறு + ற் + ஆன் |
இன் | சொன்னான் | சொல் + இன் + ஆன் |
உறுப்புகள் | எடுத்துகாட்டுகள் | பிரிப்பு |
---|---|---|
கிறு | கொடுக்கிறான் | கொடு + க் + கிறு + ஆன் |
கின்று | கொடுக்கின்றான் | கொடு + க் + கின்று + ஆன் |
ஆநின்று | கொடாநின்றான் (கொடுக்காமல் நின்றான் என்று பொருள் படும்) | கொடு + ஆநின்று + ஆன் |
உறுப்புகள் | எடுத்துகாட்டுகள் | பிரிப்பு |
---|---|---|
ப் | கொடுப்பான் | கொடு + ப் + ப் + ஆன் |
வ் | செய்வான் | செய் + வ்+ ஆன் |
கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...