Saturday, 3 June 2023

புறநானூறு பற்றிய தகவல்கள்

புறநானூறு 

* புறநானூற்றில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. அவற்றில் 

    

       138 பாடல்கள் 43 மூவேந்தர்களை பற்றியது

       141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியது

       121 பாடல்கள் பெயர் தெரியாதோர். 

(138+141+121=400)


''138 மூவேந்தர்களை பற்றியது என்பதில்''


      27 பாடல்கள் சேர மன்னர்கள் பற்றியது. 

     37 பாடல்கள் பாண்டிய மன்னர்கள் பற்றியது. 

    74 பாடல்கள் சோழ மன்னர்கள் பற்றியது. 

(27+37+74=138)


''141 குறுநில மன்னர்கள் என்பதில்''


         23-பாடல்கள் அதியமானை பற்றியது. 

        17-பாடல்கள் வேள்பாரியை பற்றியது. 

        14-பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியது. 

        07-பாடல்கள் பேகனைப் பற்றியது. 

        07-பாடல்கள் குமணனைப் பற்றியது. 

        06-பாடல்கள் காரியைப் பற்றியது. 

        05-பாடல்கள் நாஞ்சில் வள்ளுவன் பற்றியது. 

       05-பாடல்கள் பிட்டங்கொற்றான் பற்றியது. 

      04-பாடல்கள் எழினியைப் பற்றியது. 

(23+17+14+7+7+6+5+5+4=141)


4--குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும். 

6--குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும். 

29--குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடல்களிலும் பாடப்பட்டுள்ளனர். 


157--புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில். 


   15--பேர் பெண்பால் புலவர்கள். 

   142-பேர் ஆண்பால் புலவர்கள். 


(15+142=157)

     

மீதமுள்ள 14 பாடல்களைப் பாடியவர்களின் பெயர் தெரியவில்லை. 


இது மட்டுமல்லாது. 


*புறம்+நான்கு+நூறு=புறநானூறு. 

  - - புறத்தினை பற்றிய நானூறு பாடல்கள் கொண்ட நூல் இது

*பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடி தொகுக்கப்பட்டது. 

*இந்நூலுக்கு புறம், புறப்பாட்டு என்று வேறுபெயர்களும் உண்டு. 

*இந்நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார். 

*இந்நூல் மூலம் முடியுடை வேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத்தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப்புலவர்கள், எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 

*அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறியலாம். 

*எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 

*காலம் இரண்டாம் நூற்றாண்டு. 

*புறநானூற்றின் சில பாடல்களை ஜி. யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 



கவிக்கோ அப்துல் ரஹ்மான் "கொடுக்கிறேன்" கவிதை

 கொடுக்கிறேன்


கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!

கொடுப்பதற்கு நீ யார்?


நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்

உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?


உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்

உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல


உண்மையில் நீ கொடுக்கவில்லை

உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது


நீ ஒரு கருவியே


இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை


இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே


இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை


தேவையுள்ளவன் அதிலிருந்து 

வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்


நீயும் இயற்கையின் ஓர் அங்கம் 

என்பதை மறந்துவிடாதே


கொடுப்பதற்குரியது பணம் மட்டும் 

என்று நினைக்காதே


உன் வார்த்தையும் ஒருவனுக்குத்

தாகம் தணிக்கலாம்


உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில்

விளக்கேற்றலாம்


ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு


ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு


உன்னிடம் உள்ளது நதியில் உள்ள 

நீர்போல் இருக்கட்டும்


தாகமுடையவன் குடிக்கத் 

தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை


கொடு 

நீ சுத்தமாவாய்


கொடு

நீ சுகப்படுவாய்


கொடு

அது உன் இருத்தலை நியாப்படுத்தும்.



முனைவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான்

மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி

வாணியம்பாடி 



நாட்டுப்புற நகைச்சுவை கன்னக்கோல் பாடல்

  கன்னம் வைத்துத் திருடுதல் அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்கலாமா  என்பது தமிழ் பழமொழி. அதற்கேற்ப வகையில் அந்தக்காலத்தில் கன்னக்கோல் அல்...